--- --:--:-- --

உணவில் உப்பு அதிகம் என்பதால் மனைவியை கொன்ற கொடூர கணவன்..!

7

காராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்தவர் நிலீஸ்கான். 46 வயதான இவர் தனது மனைவி நிர்மலா உடன் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரது மனைவி நிர்மலா காலை உணவாக 9.30 மணி அளவில் கிச்சடி பரிமாறி உள்ளார்.

 

அந்த உணவில் உப்பு அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

 

பின்னர் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற அவர் அங்கு இருந்த ஒரு துணியை எடுத்து மனைவியின் கழுத்தை நெரித்து உள்ளார். இதனால் மூச்சு விடக்கூட முடியாமல் துடித்த மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை செய்த கொடூர கணவனை கைது செய்தனர்.

 

Right Menu Icon