--- --:--:-- --

விபத்தில் காயம் அடைந்தவர்களை காப்பாற்றாமல் காய்கறிகளை அள்ளிச் சென்ற மக்கள்..!

5

திருத்தணி அருகே விபத்தில் காயமடைந்தவர்களை மீட்காமல் சாலையில் கொட்டி கிடந்த காய்கறி மற்றும் பழங்களை பொதுமக்கள் அள்ளி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

சென்னை கோயம்பேட்டில் இருந்து காய்கறி மற்றும் பழங்களை ஏற்றிக்கொண்டு திருத்தணி சென்ற மினி வேன் பட்டாபிராமபுரம் அருகே சென்றபோது பஞ்சராகி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

அதில் வேனில் பயணித்த ஒருவர் பலியாகிய நிலையில் இரண்டு பேர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்காமல் சாலையில் கொட்டி கடந்த காய்கறி, பழங்களை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.

 

Right Menu Icon