யூகேஜி குழந்தையை அடித்ததாகப் புகார் ..!
சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் யூகேஜி படிக்கும் குழந்தைக்கு அரிச்சுவடி எழுதத் தெரியவில்லை எனக் கூறி கடுமையாக அடிததாக அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
எனினும் காவல்துறையினர் நேரடியாக பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்திவிட்டு ஆசிரியர்களை கைது செய்யவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதேநேரம் ஆசிரியர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு பிணையில் விடுவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே காயமடைந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பெற்று உடல் நலம் தேறிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அதிகாரிக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஆசிரியர்களை இன்னும் கைது செய்யவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.





