லடாக் எல்லைப் பகுதிக்கு மிக அருகே செல்போன் கோபுரங்கள் அமைத்து வரும் சீனா..!
இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினை நீடித்து வரும் நிலையில் லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிக்கு மிக அருகே சீனா செல்போன் கோபுரங்கள் அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு இந்திய சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தொடர்ந்து இதுவரை 15 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதை தொடர்ந்து எல்லைப் பகுதியில் சீனா அவ்வப்போது அத்துமீறி வருகிறது. இந்நிலையில் லடாக் எல்லை பகுதிக்கு அருகே சீனா செல்போன் கோபுரங்கள் அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.





