இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்…புத்தாடை அணிந்து மக்கள் உற்சாகம்..!
தமிழ் புத்தாண்டு தினமான இன்று கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதம் பிறந்த நாள் அன்று தமிழ் மக்கள் புத்தாடை அணிந்து கோயில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்று வழிபடுவர்.
பொங்கல் பண்டிகையை போன்று விமரிசையாக கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டு தினமான இன்று அனைவரின் வாழ்க்கையிலும் இன்பங்கள் பெறவேண்டி ஒவ்வொரு ஒருவர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர்.
தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.





