10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா சிகிச்சை..!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாவது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 796 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 36 ஆயிரத்து 928 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 946 பேர் குணம் அடைந்ததால் குணமடைந்தவரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 4 ஆயிரத்து 329 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 19 பேர் பலியானதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 710 ஆக அதிகரித்துள்ளது. குழந்தை பாதிப்பிற்கு தற்பொழுது 10 ஆயிரத்து 889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





