--- --:--:-- --

உயிருடன் இருக்கும் போதே இறுதி ஊர்வலம்..!

6

சேலத்தில் உயிருடன் இருப்பவரை பிணம் போல் அலங்கரித்து ஊர்வலமாக எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு செய்து மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

 

சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த ஜெய மணிக்கு 5 ஆண்டுகளுக்கு முன் அம்மை நோயால் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உயிருடன் இருக்கும் பொழுதே இறுதி சடங்கு செய்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக சந்தைப்பேட்டை மாரியம்மன் கோயிலுக்கு வேண்டுதல் வைத்துள்ளார்.

 

பின்னர் அவர் குணமடைந்ததும் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும் மாரியம்மன் கோவில் திருவிழாவின் இறுதி நாளில் தன்னை பிணம் போல் அலங்கரித்து பாடையில் படுத்தபடி ஊர்வலமாக எடுத்து சென்று சுடுகாட்டில் இறுதி சடங்கு செய்து நேர்த்திகடன் செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த வினோத நேர்த்திக்கடன் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

 

Right Menu Icon