--- --:--:-- --

கூல்டிரிங்ஸ் குடித்த இளைஞர் மூச்சுத்திணறி மரணம்..!

5

சென்னையை அடுத்த கரைப்பகுதியில் சிப்ஸ் கோக் குடித்த ஒரு இளைஞர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் 25 வயது இளைஞரான இவர் இறகுப் பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

 

இந்த நிலையில் தனது நண்பர்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரையில் இறகு பந்து விளையாடினர். சோர்வான பிறகு தனது நண்பர்களுடன் இணைந்து சிப்ஸ், கோக் போன்றவற்றை குடித்துள்ளார். அப்பொழுது அவருக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்படவே அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

 

அவரை அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறியதால் அவரை மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்க்க அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

 

இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon