உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலக டிவிட்டர் கணக்கு முடக்கம்..!
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலக ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவில் டுவிட்டர் கணக்கை முடக்கிய நபர்கள் அதன் முகப்பில் படமாக கார்ட்டூன் ஒன்றை கிரிப்டோகரன்சி தொடர்பான ஒன்றையும் ஹேக்கர்கள் பகிர்ந்துள்ளனர். இதையறிந்த உத்திரப்பிரதேச அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க யோகி ஆதித்யநாத்தின் முதலமைச்சர் அலுவலக டுவிட்டர் கணக்கை நீக்கியது.
பிரபலங்கள் மற்றும் தலைவர்களின் சமூக வலைதளங்களில் ஹேக்கர்கள் முடக்குவது இது முதல் முறை அல்ல பிரதமர் மோடி டுவிட்டர் கணக்கு சில மாதங்களுக்குமுன் முக்கிய நபர்கள் ஹேக் செய்து அதில் கிரிப்டோகரன்சி விளம்பரத்தை வெளியிட்டு இருந்தனர்.





