--- --:--:-- --

தண்டவாளத்தில் ரீல்ஸ்..! ரயில் மோதி பலியான இளைஞர்கள்..!

7

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் பிரகாஷ் ஆகிய இருவரும் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து வந்தனர்.

 

இவர்கள் இருவரும் தங்கள் கூட்டாளியான அசோக்குமார் என்பவருடன் சேர்ந்து ரயில்வே தண்டவாளத்தில் நின்றபடி டிக்டாக் மற்றும் இன்ஸ்ஸ்டா ரீல்ஸ் வீடியோக்கள் பதிவு செய்வது வழக்கம்.

 

தங்களது கெத்தை காட்டுவதற்காக தண்டவாளத்தில் நின்று விதவிதமாக இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவிட்டு வந்த நண்பர்கள் 3 பேர் தண்டவாளத்தில் நின்றபடி பொழுதை கழித்து வந்தனர். வியாழக்கிழமை வழக்கம் போல மூன்று பேரும் தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டு ரயில் வருவது கூட தெரியாமல் வீடியோ பதிவு செய்தனர்.

 

அப்போது சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சார ரயில் ஒன்று அதிவேகத்தில் அவர்கள் மீது மோதியது. ரயில் வந்த வேகத்தில் மூவரும் துண்டு துண்டாகி பலியாகினர்.

 

Right Menu Icon