கோயிலில் திருமணம் செய்து கொண்ட காவலர்கள்..!
சென்னை ஆவடி பகுதியில் பணியாற்றும் காவலர்கள் காதல் திருமணம் செய்துகொண்டு பாதுகாப்பு கேட்டு தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். கார்த்திக்கும், ரம்யாவும் காவலர்கள். ரம்யா என்பவர் சென்னை ஆவடி போலீசாக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் ரம்யாவின் வீட்டிற்கு தெரிய வர இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இருவரும் சென்னையில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு சேலம் மாவட்டம் அருகே உள்ள காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.






