சடலத்தை மாற்றி அனுப்பிய மருத்துவமனை..!
கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல்கள் மாற்றி வழங்கப்பட்டதால் இரு தரப்பை சேர்ந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மாதேஷ்வரன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன்பிறகு அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் மேற்கொண்ட பொழுது அது மாதேஸ்வரன் அல்ல என்பது தெரியவந்தது. முன்னதாக விபத்தில் சிக்கிய மகேஸ்வரனுக்கு வலது கையில் மூன்று விரல்கள் மட்டுமே இருந்த நிலையில் மருத்துவமனையில் வழங்கப்பட்ட உடலில் வலது கையில் ஐந்து விரல்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அத்துடன் மருத்துவமனைக்கு சென்று முற்றுகையிட்டனர்.
விசாரணையில் இவர்களுக்கு வழங்கப்பட்ட சடலம் சதீஷ்குமார் என்பவர் உடையது என்பதும் பிரேத பரிசோதனை கூடத்தில் இருந்து இவரது உடலம் அமரர் ஊர்தியில் மாற்றி அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் உடல்கள் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





