--- --:--:-- --

சென்னை மெரினா நீச்சல்குளம் நாளை முதல் திறப்பு..!

6

சென்னை மாநகராட்சி சார்பில் மெரினாவில் பராமரிக்கப்பட்டு வரும் நீச்சல்குளம் கொரொனா பரவல் காரணமாக இரண்டு வருடங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் மீண்டும் பயன்பாட்டிற்கு வர உள்ளது. கொரொனா காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் நீச்சல் குளம் 2 ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளது.

 

தற்போது கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளதால் நீச்சல்குளம் திறக்கப்படுகிறது. மூடப் பட்டிருந்த காலத்தில் நீச்சல் குளத்தில் பல்வேறு பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

தற்போது கோடை காலம் தொடங்கி இருப்பதால் நீச்சல் குளத்தை பயன்படுத்த வருவோர் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சரியான கால இடைவெளியில் நீச்சல் குளத்தை சுத்தம் செய்து பராமரிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon