--- --:--:-- --

அண்ணாமலை பல்கலைக்கழக படிப்புகள் செல்லாது..!

3

னுமதி பெறாமல் 2015 – 2016 ஆம் ஆண்டு முதல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட தொலைதூரக்கல்வி படிப்புகள் செல்லாது என பல்கலைக்கழக மாற்று குழு அறிவித்துள்ளது.

 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழு என அழைக்கப்படும் யுஜிசி அறிவிப்பின்றி தொலைதூரக் கல்வி படித்த நடத்தப் படுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் அனுமதி பெறாமல் 2015 – 2016 ஆம் ஆண்டு முதல் அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி மற்றும் திறந்த நிலை கல்வி படிப்புகளை நடத்தி வருவதாகவும் இது விதி மீறல் எனவும் யுஜிசி கண்டனம் தெரிவித்துள்ளது.

 

மேலும் உரிய அனுமதி பெறாமல் தொலைதூரக் கல்வி மற்றும் திறந்த நிலை கல்வி மூலம் படிப்புகளை வழங்கியதால் அந்த படிப்புகளும் அதன் மூலம் வழங்கப்பட்ட சான்றிதழ்களும் செல்லாது எனவும் யுஜிசி அறிவித்துள்ளது.

 

மாணவர்கள் யாரும் இனி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி படிப்பிலும் அல்லது திறந்தநிலை படிப்பில் சேர வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கியுள்ளது.

 

Right Menu Icon