விமானத்தில் செல்ல துரைமுருகனுக்கு அனுமதி மறுப்பு..!
விசாவில் பழைய பாஸ்போர்ட் எண் இருந்ததால் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனின் துபாய் பயணம் நிறுத்தப்பட்டுள்ளது. 2 நாள் அரசு முறை பயணமாக இன்று காலை துரைமுருகன் துபாய் செல்லவிருந்தார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர் பாஸ்போர்ட் மற்றும் விசா ஆய்வு செய்யப்பட்டது. அப்பொழுது விசாவில் பழைய பாஸ்போர்ட் எண் குறிப்பிடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் விமானத்தில் பயணம் செய்ய முடியாமல் துரைமுருகன் வீடு திரும்பினார்.
விசாவில் பாஸ்போர்ட் எண்ணை மாற்றி இன்று மாலை துரைமுருகன் துபாய் செல்வார் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






