--- --:--:-- --

தந்தைக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டுத் துப்பட்டாவால் தற்கொலை செய்த மாணவி..!

6

சென்னையில் தங்கி ஃபார்ம் டி படித்து வந்த மாணவி பாடங்கள் மிகவும் கஷ்டமாக உள்ளதா தற்கொலை செய்யப்போவதாக தந்தைக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தற்கொலை செய்துகொண்டார். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பவித்ரா பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

 

நான்காம் ஆண்டு மாணவியான பவித்ரா தோழிகளுடன் வாடகை வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். படிக்கப் போவதாகக் கூறி விட்டு படுக்கையறைக்கு சென்ற பவித்ரா வெகு நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த தோழிகள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது பவித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

 

அரியர்கள் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த மாணவி, தன்னால் குடும்பத்திற்கு எவ்வித பயனும் இல்லை என தந்தைக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

 

கடந்த வாரம் இதே கல்லூரியை சேர்ந்த மாணவி ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon