ஓங்கி அறைந்த ஆசிரியர்… மாணவரின் காதில் ரத்தம்..!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த மாணவர் இயேசு ராஜா. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களை தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.
இதில் மாணவனின் காதில் இருந்து ரத்தம் வழிய ஆசிரியர் உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதுடன் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் மாணவரின் ஒரு காது கேட்காமல் போக பெற்றோர் அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஸ்ரீவைகுண்டம்.காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.






