--- --:--:-- --

மாணவன் கொலை முயற்சியால் ரூமுக்குள் ஒளிந்த தலைமை ஆசிரியர்..!

4

சேலம் அருகே கொண்டை முடியுடன் பள்ளிக்கு வந்த மாணவன் ஒருவன் முடி சரியாக வரவில்லை எனக் கூறிய தலைமை ஆசிரியரை தாக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவன் ஒருவன் கொண்டை முடியுடன் வந்ததாக கூறப்படுகிறது.

 

 

முடியை சரியாக வெட்டி விட்டு வருமாறு தலைமையாசிரியர் அறிவுறுத்தியதால் கோபமடைந்த அந்த மாணவன் பீர் பாட்டிலால் தலைமை ஆசிரியரை தாக்கியதாக தெரிகிறது. இதனால் மாணவனுக்கு பயந்து பள்ளியின் தலைமையாசிரியர் அலுவலக கதவை பூட்டி விட்டார்.

 

பள்ளியில் இருந்த நாற்காலி மற்றும் அழகுப் பொருட்களை சூறையாடிய அந்த மாணவன் மற்ற ஆசிரியர்களையும் துரத்தியுள்ளார். இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். மாணவியின் தந்தையும் பள்ளிக்கு வந்தார்.

 

போலீசார் மற்றும் தந்தையின் முன்னிலையில் அந்த மாணவர் ஆசிரியர்களை தகாத வார்த்தையால் பேசியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வரும் நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதால் மாணவருக்கு காது கேட்கவில்லை என மாணவரின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

 

Right Menu Icon