தமிழ்நாடு முழுக்க 2 நாட்கள் ஆட்டோ ஓடாது..!
ஒன்றிய தொழிற்சங்கங்கள் வருகிற 28, 29 ஆகிய நாட்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
வேலைநிறுத்தம் நடக்கக்கூடிய 28, 29 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓடாது என அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




