--- --:--:-- --

லாலு பிரசாத் யாதவுக்கு இதயம், சிறுநீரகத்தில் பிரச்னை..!

9

லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மோசம் அடைந்ததை அடுத்து மருத்துவமனையில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். முன்னதாக லாலு பிரசாத் யாதவ் ஏற்கனவே கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது.

 

கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒன்றிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தின் ஐந்தாவது கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 60 லட்சம் ரூபாய் தண்டனை விதிக்கப்பட்டது.

 

மேலும் இவற்றின் மீதான விசாரணை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இதய மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon