வேலூரில் பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்..!
வேலூரில் நள்ளிரவில் ஆண் நண்பருடன் ஆட்டோவில் பயணித்த பெண்ணை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போதையில் இரண்டு இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த பொழுது வழிப்பறி செய்த பணத்தை பங்கிட்டு கொள்வதற்காக மோதலில் ஈடுபட்டது உறுதியானது. போதையில் இருந்தவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை மூன்று நாட்களுக்கு முன்பாக கூட்டு பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அதன்படி கடந்த 16ஆம் தேதி தன் ஆண் நண்பருடன் ஆட்டோவில் நள்ளிரவில் வந்த பெண் ஒருவரை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனர். பின்னர் செல்போன் 2 சவரன் தங்க நகைகள், 40,000 ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை வழிப்பறி சென்றதும் தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





