--- --:--:-- --

ரேஷன் கடையில் நடந்த கொடுமை..!

10

புதுச்சேரி ரேஷன் கடைகளில் புழு, பூச்சிகள் உடன் இலவச ரேஷன் அரிசி வழங்கப்படுகிறது என்று அதிமுக மாநில தேர்தலில் செயலாளர் வையாபுரி மணிகண்டன் குற்றம்சாட்டியுள்ளார்.

 

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட நியாயவிலை கடைகளில் அதிமுக மாநில தேர்தல் பிரிவு செயலாளர் ஆய்வு செய்தார். அப்பொழுது அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்கள் உண்ண தகுதியற்ற அரிசி வழங்கப்படுவதை அறிந்தவர் கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர் புதுச்சேரியில் வழங்கப்படும் இலவச அரிசி முழுவதும் புழு பூச்சிகள் உடன் மக்களுக்கு வழங்கப்படுவதாக கூறினார். இந்த அரிசியை திரும்பப் பெற்றுக்கொண்டு நல்ல அரிசியை மக்களுக்கு வழங்க வேண்டும் என கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon