கள்ளக்காதலால் மாமனார், மாமியார் கொலை செய்ய முயன்ற மருமகள்..!
ஈரோடு அருகே கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியை கணவன் கண்டித்த நிலையில் கணவரிடம் உண்மையை சொன்ன மாமனார், மாமியாரை மருமகள் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சுப்புராயன் தோட்டம் பகுதியை சேர்ந்த முருகசாமி – அருக்காணி அம்மாள் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களது மருமகள் லதா கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அவரது கணவர் சின்னசாமியிடம் முருகசாமி – அருக்காணி அம்மாள் தகவல் தெரிவித்துள்ளனர் .இதனைச் கணவர் சின்னசாமி கண்டித்த நிலையில் ஆத்திரமடைந்த மருமகள் லதா தனது கள்ளக்காதலன் தமிழரசன் ஆகிய ஐந்து பேருடன் சேர்ந்து மாமனார் மாமியாரை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




