மாணவர்களின் சாதியை கேட்கிறதா அரசு..?
பள்ளி மாணவர்களிடம் சாதி குறித்து தமிழக அரசு எந்த விவரங்களும் கேட்டதே இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் பள்ளி மாணவர்களிடம் சாதி விவரங்கள் கேட்கப்படுவதாக நாளிதழில் வெளியான செய்தி தவறானது என்றும் மாணவர்களிடம் எந்த சாதி என்ற விவரங்களை கேட்பது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பல்வேறு அரசுத் திட்டங்கள் மாணவர்கள் எந்த வகுப்பைச் சார்ந்தவர்கள் என்ற விபரங்கள் மட்டுமே கேட்கப் படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் போன்ற விவரங்கள் தான் அரசுக்கு தேவையே தவிர சாதி அல்ல என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.





