--- --:--:-- --

சடலத்தை தூக்க ஓடி வந்து உதவிய பெண் காவலருக்கு குவியும் பாராட்டுகள்.!

2

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தவரின் சடலத்தை அப்புறப்படுத்த யாரும் முன்வராத நிலையில் பெண் காவலர் ஒருவர் மற்றொருவடன் சேர்ந்து சடலத்தை அப்புறப்படுத்தினார்.

 

கடந்த திங்கள்கிழமை இரவு அல்லிகுளம் புறநகர் ரயில் நிலையத்திற்கு தனது சித்தியுடன் வந்த ஒருவர் நுழைவுவாயில் அருகே திடீர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். உடன் சென்ற சித்தி என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டு இருக்கவே தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்றனர்.

 

சடலத்தை அப்புறப்படுத்த யாரும் முன்வராத நிலையில் ரோந்து வாகனத்தில் வந்த பெண் காவலர் லீனா என்பவர் சக காவலர்கள் உதவியோடு உடலை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தார். அவரது இந்த செயலை உயரதிகாரிகள் பாராட்டி சன்மானம் வழங்கினர்.

 

Right Menu Icon