--- --:--:-- --

பார்களை மூடவேண்டும் என்ற உத்தரவு தேவையற்றது..!

5

டாஸ்மாக் மது கடைகள் உடன் அமைந்துள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் சில்லறை வருமான கடைகள் தொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் டெண்டர் வெளியிட்டது.

 

இதனால் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப்படி பார் நடத்த டாஸ்மாக்கிற்கு அதிகாரம் இல்லை என குறிப்பிட்டார். மேலும் 6 மாதத்திற்குள் டாஸ்மாக் கடைகளில் அருகிலுள்ள பார்களை மூட வேண்டும் என உத்தரவிட்டார்.

 

இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழ் நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகளின்படி மதுக்கடைகளின் அருகில் பார்களுக்கு அந்த டாஸ்மாக் நிறுவனத்திற்கு அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளது.

 

தனி நீதிபதி டாஸ்மாக் பார்களை மூடவேண்டும் என பிறப்பித்த உத்தரவு தேவையற்றது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon