வகுப்பறையில் ஏற்பட்ட தகராறில் மாணவர் உயிரிழப்பு..!
தெலுங்கானா மாநிலத்தில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வகுப்பறையில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். ஹைதராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் கிரிக்கெட் விளையாடும் பொழுது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
தொடர்ந்து வகுப்பறைக்குள் வந்த மாணவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு சரமாரியாக தாக்கி கொண்டதாகவும் இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த சுமன் எனும் மாணவன் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





