--- --:--:-- --

நிலவில் மோதப்போகும் குப்பை..!

8

நாளை நிலவின் மீது மூன்று டன் எடை கொண்ட குப்பை மோதுவதாக விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர். பல்வேறு உலக நாடுகளால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட செயற்கை கோள்கள் விண்கலங்கள் உள்ளிட்டவை காலாவதியாகி சுற்றி வருகின்றன.

 

விண்வெளியில் இருந்து பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்துவது ஒருபுறமிருக்க எதிர்கால விண்வெளி முயற்சிகளையும் மிகவும் கடினமாக்கும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் சுமார் 3 டன் எடை கொண்ட விண்வெளி குப்பை நிலவின் மீது மோதும் என கடந்த ஜனவரி மாதம் நாசா அறிவித்தது.

 

அதன்படி அந்த குப்பைகளை நிலவின் மீது மணிக்கு 9,300 கிலோ மீட்டர் வேகத்தில் மோதுவதால் 33 அடி முதல் 65 அடிவரையிலும் பெரிய பள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon