--- --:--:-- --

விமான நிலைய கழிவறையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

1

சென்னை விமான நிலைய கழிவறையில் மத்திய தொழில் பாதுகாப்பு துறையினர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்ற யாஸ்பால் என்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

 

கழிவறைக்கு சென்ற அவர் திடீரென தான் வைத்திருந்த கை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற வீரர்கள் விரைந்து சென்று பார்த்த பொழுது அவர் உயிரிழந்து கடந்துள்ளார்.

 

தற்கொலை தொடர்பாக மீனம்பாக்கம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon