--- --:--:-- --

முக்கியத் தலைவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை..?

1

முதலமைச்சர் மு க ஸ்டாலின் சுயசரிதையான உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள இருக்கும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, பிற மாநில அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் நிகழ்வில் ராகுல் காந்தி கலந்து கொண்டு முதல்வரின் சுயசரிதை நூலை வெளியிடுகிறார். நூல் வெளியீட்டு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேசிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

 

மேலும் கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இதையடுத்து ராகுல் காந்தி, உமர் அப்துல்லாவுக்கு தமிழக முதலமைச்சர் விருந்து வழங்கவுள்ளார். அப்போது தலைவர்களுடைய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

 

தேசிய அளவிலான அடுத்தகட்ட அரசியல் சூழல் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான அணியை கட்டமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

 

Right Menu Icon