--- --:--:-- --

முதிய தம்பதியை வீடு புகுந்து கம்பி, அரிவாளால் சரமாரியாக தாக்கிய 5 பேர்..!

2

தூத்துக்குடி மாவட்டம் முத்து கிருஷ்ணாபுரத்தில் சொத்து தகராறு காரணமாக முதியவர்களை வீடு புகுந்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பொன்னம்மாள், ஜான் ரவீந்திரன் தம்பதிக்கும், பொன்னம்மாளின் தம்பதி ஞான திரவியம் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் ஞான திரவியம் குடும்பத்தினர் ஐந்து பேர் சேர்ந்து சொத்தை எழுதி தருமாறு கேட்டு பொன்னமாள், ஜான் ரவீந்திரன் தம்பதியை வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் தம்பதி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் உரிய விசாரணை நடத்த சம்பந்தப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon