அரைகுறை ஆடைகள் அணிந்து வரக்கூடாது எனக்கூறிய போலீசார்..!
இந்த மாதிரி ஆடைகள் அணிந்து வரக்கூடாது என சுற்றுலா வந்த பெண்களிடம் போலீசார் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுற்றுலாத்தலமான புதுச்சேரியில் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
அதேபோல பிரெஞ்ச் கட்டிடக் கலையுடன் கட்டப்பட்டிருக்கும் வீடுகள், கட்டடங்கள் போன்றவற்றைப் பார்க்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வருகை தருகின்றனர்.
அப்படி வருகை தருபவர்கள் புதுச்சேரியின் தட்பவெப்ப நிலைக்கு தகுந்தார் போல் டீசர்ட், அரைக்கால் சட்டை, ஜீன்ஸ் போன்றவற்றை அணிந்துள்ளனர். இந்த நிலையில் அங்கு சென்ற சுற்றுலா பயணிகளை ரோந்து சென்ற போலீசார் இதுபோன்ற அரைகுறை ஆடை அணியக்கூடாது என்று கூறியுள்ளனர்.
அதற்கு அந்த பெண்கள் தங்கள் உடை குறித்து யாரும் புகார் கொடுத்தது என்று கேள்வி எழுப்ப அதற்கு சரியாக பதிலளிக்க முடியாமல் அந்த போலீசார் திணறியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.





