--- --:--:-- --

ரவுடி பேபி சூர்யா மீதும் குண்டாஸ்..!

3

யூடியூபில் ஆபாசமாக பேசிய சிக்கந்தரை தொடர்ந்து ரவுடி பேபி சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த ரவுடி பேபி சூர்யா கள்ளக்காதலன் சிக்கா இருவரும் நடத்திவரும் யூடியூபில் மதுரையை சேர்ந்த குடும்பத்தினரை ஆபாசமாகப் பேசிய காரணத்தினால் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

கடந்த வாரம் சிக்கா மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ரவுடி பேபி சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon