--- --:--:-- --

செல்போனில் கேம் விளையாடியதற்கு தந்தை திட்டியதால் விஷம் குடித்த பள்ளி மாணவி..!

4

ல்வராயன் மலை அருகே செல்போன் விளையாடியதை தந்தை கண்டித்ததால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புவனேஸ்வரி சின்ன சேலம் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

 

படிக்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த புவனேஸ்வரியை அவருடைய தந்தை பழனிசாமி கண்டித்திருக்கிறார். இதனால் மனம் உடைந்த புவனேஸ்வரி விவசாயத்திற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்து மயக்கம் அடைந்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

 

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Right Menu Icon