பிறந்தநாளுக்கு பூ பூக்காததால் பணியாளர்களை சித்ரவதையில் தள்ளிய அதிபர்..!
Russian President Vladimir Putin (R) meets with North Korea's leader Kim Jong Un in Vladivostok, Russia April 25, 2019. Sputnik/Alexei Nikolsky/Kremlin via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY.
இந்தாண்டு பூக்கள் சரியான நேரத்திற்கு மலராததால் கோபமடைந்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தோட்ட பணியாளர்களை வதைமுகாமுக்கு அனுப்பி வைத்துள்ளார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தந்தையின் பிறந்த நாள் வருடம் தோறும் பிப்ரவரி 16ஆம் நாள் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இதற்காக தந்தையின் பெயரில் உருவாக்கப்பட்ட மலரான கிம் ஜாங் லியா என்ற பெக்கோணியா தாவர வகையை சேர்ந்த மலர்கள் கொண்டு நிகழ்விடம் அலங்கரிக்கப் படவேண்டும். இந்த ஆண்டு பூக்கள் சரியான நேரத்திற்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த அதிபர் கிம் ஜாங் உன் அங்கு பணிபுரிந்த தோட்டக்கலை பணியாளர்களை ஆறுமாதங்களுக்கு வதை முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளார்.





