--- --:--:-- --

காணாமல் போன மாற்றுத் திறனாளிப் பெண், புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு..!

2

தேனி மாவட்டம் கூடலூர் அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்படும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அவரது வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். குள்ளப்பகவுடர் பட்டியைச் சேர்ந்த முத்துப்பேச்சி என்பவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

 

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ரேஷன் கடைக்கு சென்று திரும்பிய முத்துப்பேச்சி காணாமல் போனதாக அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

இந்நிலையில் அவரது வீட்டின் அருகே தரை தோண்டப்பட்டு பின் மூடி இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது முத்துப்பேச்சி உடல் சிதைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

Right Menu Icon