நாமம் பட்டை அடிக்க எல்லாவற்றிற்கும் உரிமை உண்டு..!
சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் புகார் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் சட்டத்தை தடை செய்யாமல் அதனை துரிதப்படுத்தி இருப்பதாக குற்றம் சாட்டினார்.
நேர்மையாளர்களுக்கு ஊடகங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். நீட் தேர்வை ஒழிப்பதாக கூறிவிட்டு இப்பொழுது நீட்டுக்கு பயிற்சி என கூறுவதாக புகார் தெரிவித்துள்ளார். ஹிஜாப் விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் கூறிய அவர் நாமும் போட, பொட்டு வைக்க எல்லாவற்றுக்கும் உரிமை உண்டு என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





