--- --:--:-- --

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக இன்று விசாரணை..!

5

ஹிஜாப் தொடர்பான வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் இன்று பிற்பகல் நடைபெறும் என கர்நாடக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக அண்மையில் ஏற்பட்ட சர்ச்சை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த சில அரசியல் அமைப்புகள் கேள்விகளை எழுப்புகிறது என தெரிவித்திருக்கிறார்.

 

அதையடுத்து இந்த வழக்கிற்கு கூடுதல் அமர்வு அமைக்க வேண்டுமா என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்ய வேண்டும் என கூறிய நீதிபதி வழக்கை உடனடியாக தலைமை நீதிபதியின் முன்பாக பரிசீலனைக்கு உத்தரவிட்டார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு வரும் என்றும் அந்த அமர்வு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இன்று பிற்பகல் விசாரணை நடைபெறும் எனவும் கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon