--- --:--:-- --

திருப்பூரில் சூட்கேஸில் இருந்த பெண்ணின் சடலம்..! வெளிவந்த உண்மை..!

6

திருப்பூரில் சூட்கேசில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

திருப்பூர் தாராபுரம் சாலையில் கடந்த 7ஆம் தேதி கேட்பாரற்று கிடந்த சூட்கேசை கைப்பற்றிய காவல்துறையினர் அதைத் திறந்து பார்த்தபோது ஒரு பெண்ணின் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 

கொலை தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நிலையில் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்துள்ளனர்.

 

2 பேர் பெண்ணின் சடலத்தை சூட்கேசில் கொண்டு வந்தது தெரியவந்ததையடுத்து அந்த பெண் வசித்து வந்த வீடு பற்றி தகவல் கிடைத்த நிலையில் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என தெரிய வந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

கடந்த மாதம்தான் அந்தப்பெண் திருப்பூர் வந்து வாடகைக்கு குடியிருந்தார் எனவும், அவருடன் தங்கியிருந்த நபர் வீட்டை காலி செய்து பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் வீட்டு உரிமையாளர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்போது அந்த நபர் பெரிய சூட்கேசை எடுத்து சென்றதும் தெரிய வந்துள்ளது.

 

இந்த கொலையில் அந்த பெண்ணுடன் தங்கியிருந்த நபருடன் வேறு ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும், இருவரும் வட மாநிலத்திற்கு தப்பி சென்றிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

 

Right Menu Icon