--- --:--:-- --

நிலத்தில் கடலையை பறித்து சாப்பிட்டார் பிரதமர்..!

2

டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசு அதிக முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் 50 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

 

அப்போது பேசிய அவர் 80 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ள சிறு விவசாயிகளின் மீது உள்ளதாக தெரிவித்தார். பருவநிலை மாற்றத்தில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க மீண்டும் அடிப்படை மற்றும் எதிர்காலத்திற்கு பயணம் என்ற திட்டத்தில் இந்தியாவின் கவனம் இருப்பதாக கூறினார்.

 

வேளாண்மையில் உள்ள பெண்களுக்கு சுய உதவி குழுக்கள் மூலம் ஆதரவு அளிக்கப்படுகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார். மக்கள் தொகையில் பெரும் பகுதியை வறுமையில் இருந்து வெளியேற்றி சிறந்த வாழ்க்கை மனைக்கு கொண்டு செல்ல புதிய மாற்றம் மிக்கதாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

 

Right Menu Icon