--- --:--:-- --

கருணைக் கொலை செய்யுமாறு கேட்ட திருநங்கை..!

3

டந்த 2011ஆம் ஆண்டு நவம்பரில் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு சென்றிருந்தார் திருநங்கை அணிராக். இது கடந்த இரண்டு மாதங்களில் அவரது 14வது நேர்முக தேர்வாகும். கேரள மாநிலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தற்காலிகமாக வேலை கிடைத்தும் இரண்டு மாதங்களுக்குள் தான் அநியாயமாக நீக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

 

இதைப் பற்றி அந்த பள்ளியின் தலைமையாசிரியர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் கூறுகையில் அவர் நீக்கப்படவில்லை என்றும் அவர் தவறாக புரிந்து கொண்டதாகவும் தலைமை ஆசிரியர் கூறுவதாக கூறுகிறார். ஜனவரி மாதம் அரசிடம் இருந்து ஒரு சட்ட உதவியை கோரினார்.

 

அதாவது தன்னை கருணை கொலை செய்வதற்கான மனுவை தாக்கல் செய்ய ஒரு வழக்கறிஞரை தேடியுள்ளார். சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் அது முடியாமல் போய்விட்டதே எனவும் காரணம் கூறுகிறார்.

 

எனவே அரசு உடனடியாக இதில் தலையிட்டு செயல்பட்டதால் அவருக்கு வேறு வேலை கிடைத்தது. தனது வாவை அழித்து கொள்வதில்லை என்பதில் மிக உறுதியாக இருக்கிறார்.

 

Right Menu Icon