கொரோனா பாசிடிவ் ஆகும் 3 பேரில் ஒருவர் தொற்று பரப்பாதவர்..!
பரிசோதனையில் பாசிட்டிவ் என கண்டறியப்பட்ட மூவரில் ஒருவருக்கு தொற்று பரவும் தன்மை இல்லாதது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரொனாவின் தன்மை குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
கொரொனா பரவும் தன்மை குறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமீபத்திய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. பல்வேறு வெப்பநிலையில் பிசிஆர் சோதனைக்கான மூக்கு, தொண்டை மாதிரி எடுக்கப்படும் நிலையில் இருப்பதற்கான அளவு மாறுவதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அளவு இல்லாத நிலையில் கண்டறியப்படும் மூன்று பேரில் ஒருவர் தொற்றும் தன்மை இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தனிமைப்படுத்திக் கொள்ளும் மூவரில் ஒருவர் கொரொனா தொற்றும் தன்மை இல்லாதவராக இருப்பதாகவும் தனிமைப்படுத்தல் அவசியம் இல்லாமல் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் பரிசோதனை முறையில் குழப்பங்களைத் உள்ளதாகவும் அந்த ஆய்வில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.






