--- --:--:-- --

நாளை முதல் காணொளி வாயிலாக முதலமைச்சர் தேர்தல் பரப்புரை..!

8

முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக திமுக அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொரொனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

 

இந்த நிலையில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் பரப்புரை அட்டவணையை அந்த கட்சி மேலிடம் வெளியிட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 6ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை காணொளி வாயிலாக மு க ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆறாம் தேதி கோவை மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையை தொடங்குகிறார். 7ம் தேதி சேலம், 8ம் தேதி கடலூர், 9ஆம் தேதி தூத்துக்குடி, 10ம் தேதி ஈரோடு மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

 

பிப்ரவரி 11ஆம் தேதி கன்னியாகுமரி, 12ஆம் தேதி திருப்பூர், 13ஆம் தேதி திண்டுக்கல், 14-ஆம் தேதி மதுரை, 15ஆம் தேதி தஞ்சை மாவட்டங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும்
வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.

 

Right Menu Icon