இங்கிலாந்து வர முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு..!
ஜான் பென்னிகுவிக்கின் சிலை திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் கலந்துகொள்ள வேண்டுமென பென்னிகுயிக் ஆராய்ச்சியாளர் சந்தானம் நேரில் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த சந்தானம் ஜான் பென்னிகுயிக் சிலை அவரது பிறந்த ஊரான இங்கிலாந்தில் நிறுவப்படும் என தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து சிலை நிறுவுவதற்கான பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
சிலை அமைக்கும் பணி ஜூலை மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறிய அவர் சிலை திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.






