--- --:--:-- --

கொரோனா தடுப்பூசிகள் வீண் ஆகிறதா..?

3

யன்படுத்தப்படாத 50 லட்சத்துக்கும் அதிகமான கோவிஷீல்டு தடுப்பூசி வீணாகும் அபாயம் உள்ளதாக வெளியான செய்திக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

 

தடுப்பூசி இயக்கம் துவங்கப்பட்டதிலிருந்தே தடுப்பூசிகள் வீணாவதை தடுக்க வேண்டும் என மாநில அரசுகளிடம் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் காலாவதி ஆவதற்கு முன்பே அவர்கள் மக்களுக்கு செலுத்தவும் மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக விளக்கமளித்துள்ளது. எனவே தடுப்பூசி வீணாகும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon