நாங்களும் மனிதர்கள்தான் எங்களுக்கும் உணர்வுகள் உண்டு: கீர்த்தி ஷெட்டி
நடிகர்களாக இருந்தாலும் நாங்களும் மனிதர்கள் தான் எங்களுக்கும் உணர்வு உண்டு என தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி வேதனை தெரிவித்துள்ளார்.
நாணி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஷ்யாம் ஷிங்காராய் படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். இந்த பட நிகழ்ச்சியின்போது நெருக்கமான காட்சிகளில் நடிப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர் மக்கள் மரியாதை குறைவாக எதைப் பேசினாலும் எங்களுக்கு வலிக்காது என்பதில்லை எனவும் அனைத்து நடிகர்கள் சார்பாகவும் இதை தான் கேட்டுக் கொள்வதாகவும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.





