--- --:--:-- --

காதலி இறந்ததால் காதலன் தற்கொலை..!

2

சென்னையில் காதலி இறந்த சோகத்தில் மன விரக்தியில் இருந்த காதலன் வாட்ஸ்அப் வீடியோ மூலம் தகவல் கொடுத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

மதுரையை சேர்ந்த 20 வயதான பிரபு கார்த்திக் சென்னையில் வங்கி தொடர்பான வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். இரு தினங்களுக்கு முன் பெரியமேடு பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து பிரபு கார்த்திக் ஞாயிற்றுக்கிழமை இரவு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

முன்னதாக தற்கொலை செய்து கொள்ளப் போவது குறித்து பேசி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு உடனடியாக தூக்கு கயிறுடன் செல்பி எடுத்து அதனையும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதிர்ச்சியான நண்பர்கள் அவரை போனை எடுக்காததால் விடுதிக்குச் சென்று அறை கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.

 

கதவு திறக்கப்படாத நிலையில் தகவல் அறிந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பிரபு கார்த்திக்கின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளது.

 

பிரபு கார்த்திக் தனது தாய் மாமன் மகளை காதலித்து வந்தார் என்றும் கடந்த மாதம் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படும் நிலையில் அந்த சோகத்தில் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 

Right Menu Icon