--- --:--:-- --

கேரளாவில் கொரொனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

3

ந்தியாவின் பிற பகுதிகளில் கொரொனா தொற்று குறைந்து வரும் நிலையில் கேரள மாநிலத்தில் கொரொனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தொடங்கிய கொரொனா மூன்றாம் அலை தற்பொழுது குறைந்து வருகிறது.

 

ஆனால் கேரளத்தில் மட்டும் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கேரளத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 51 ஆயிரத்து 570 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக மாநிலத்தில் தற்போது மொத்தமாக 5 லட்சத்து 27 ஆயிரத்து 22 பேர் பாதிக்கப்பட்டு நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் . மேலும் இதில் 5 லட்சத்து 14 ஆயிரத்து 134 பேர் வீட்டு தனிமையிலும், 12,628 பேர் மருத்துவமனைகளில் இருப்பதாக கேரள சுகாதாரத்துறைதகவல் வெளியிட்டுள்ளது.

Right Menu Icon