--- --:--:-- --

மத்திய பொது பட்ஜெட் இன்று தாக்கல்..!

1

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய உள்ளார். முதல் முறையாக இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

 

இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நேற்று தொடங்கியது. குடியரசுத் தலைவர் உரையை தொடர்ந்து ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

 

இந்த நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இரண்டாம் நாளான இன்று மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த முறை பொது பட்ஜெட் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட உள்ளது.

 

பட்ஜெட்டில் வருமான வரி, பொருளாதாரம், சுகாதாரம், பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி மற்றும் வேளாண் துறைக்கு சாதகமான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. வளர்ச்சியை மையமாகக் கொண்டு ஏழை எளிய மக்கள் பயனடையும் விதமாக அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Right Menu Icon