--- --:--:-- --

இன்று 20வது மெகா தடுப்பூசி முகாம்..!

4

தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் மையங்களில் 20ஆவது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் செப்டம்பர் மாதத்தில் இருந்து தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது.

 

இதில் வழக்கத்தை விட கூடுதலான எண்ணிக்கையில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்படி தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெறுகிறது.

 

முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இரண்டாம் தவணைக்கான அவகாசம் முடிந்து உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்திற்கு பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon